Thursday 9 August 2012

விபரீதத்தில் முடிந்த சிறுவர்களின் வினோத விளையாட்டு. ( வீடியோ )


ஜேர்மன் மொழியில் பேசும் இரு சகோதரர்களின் வினோதச்செயல் விபரீதமானதை காட்டும் காணொளி ஒன்று யூடியூப் தளத்தில் வெளியாக சாதனை படைத்துள்ளது.அதாவது சகோதரர்கள் இருவரும் தாம் வினோத செயல் ஒன்றை செய்யப் போவதாக கூறி அதற்கு தயாராகும் வேளையில் அவர்களில் மூத்தவர் செயலில் இறங்கி மேசை மீது வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அசையாதிருக்க அப்பொருட்களின் கீழுள்ள துணியை இழுத்து வெற்றிகரமாக முடிக்கின்றார்.
ஆனால் முடிக்கும் இறுதி நொடிப் பொழுதில் அவருக்கு பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இளைய சகோதரன் தாக்கப்பட்டு விபரீதத்திற்கு உள்ளாகின்றார். இக்காணொளியை 1.3 பில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடனத்தில் தூள்கிளப்பு​ம் சின்னஞ்சிறு பாலகன் (வீடியோ, படங்கள் இணைப்பு)


ரஷ்யாவை சேர்ந்த சின்னஞ்சிறு பாலகன் ஒருவன் நடனத்தில் மிகக்கடினமாக அசைவுகளையெல்லாம் மிகவும் இலகுவாக செய்து பலரது கவனத்தையும் தன்பால் ஈர்த்துள்ளான்.
ரஷ்யாவின் பாரம்பரிய நடனங்களை எல்லாம் தனக்கே உரிய பாணியில் மிகவும் கவர்ச்சியாக ஆடுகின்றார் இச்சிறுவன்.
நடனத்தில் இவருடன் சேர்ந்து ஆடும் பெண்ணும் அனைவரையும் கவரக்கூடியவாறு ஆடுவதால் இந்த ஜோடியின் இரண்டு நிமிடங்கள் வரை ஓடக்கூடிய காணொளியானது இணையதளத்தில் இதுவரையில் ஏறத்தாழ 6,90,000 ரசிகர்களின் பார்வையைக் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விநோத நீலநிற நண்டு: அமெரிக்காவில் கண்டுபிடிப்பு


அமெரிக்காவில் அரிதான நீல நிற நண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந் நண்டானது ஆய்வுக்காக அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந் நண்டின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் மரபணுக் குறைபாடு மூலம் அந் நண்டு இவ் விநோத நிறத்தை பெற்றதாக அறியப்பட்டது.
மேற்கொண்டு நடைபெற்ற ஆய்வின் மூலம், விசேடவகை புரதம்,மற்றும் astaxanthin எனப்படும் சிவப்பு caratenoid மூலக்கூறு என்பவற்றின் சிக்கல் பிணைப்பு மூலம் நண்டு இவ் பிரத்தியக நிறத்தை பெற்றதாக கண்டுபிடிக்கப்பட்டது.
இயற்கையின் அற்புதங்களில் இதுவும் ஒன்று என கனெக்டிகட் பல்கலைக்கழக மரபணு ஆய்வாளார்கள் தெரிவித்துள்ளனர்.

தன் குட்டியை தானே உண்ணும் பனிக்கரடி – அதிர்ச்சியான படங்கள்!

குட்டி இறந்த பின்பு உன்னுகிறதோ அல்லது குட்டியை கொன்று உணாவாக்குகிறதோ தெரியவில்லை, பனிக்கரடிகள் தங்களின் குட்டிகளுடன் மிகவும் சந்தோசமாக வாழ்பவை, தாய் எங்கு சென்றாலும் பின்னாலே குட்டிகளும் அணிவகுத்துச் செல்லும்
இதனால் பனிக்கரடிக்கு தாய்ப்பாசம் அதிகம் இருப்பதாக எண்ணி வந்தோம், எனினும் இந்த காட்சிகளின் பின்னர் பனிக்கரடிக்கு அந்த தகுதி இல்லையென்பதை அறியமுடிகிறது, மனிதர்களே நரமாமிசம் சாப்பிடும்போது கரடி தன் குட்டியை சாப்பிடுவது பெரிதல்ல!






யானைகளை கதிகலங்க வைத்த குருவிகள்!(வீடியோ இணைப்பு)

காண்பவர்களை கதிகலங்க வைக்கும் இராட்சத உருவம் கொண்ட யானைகள் குருவிகளை கண்டு கதிகலங்கியுள்ளன. இந்த சுவாரஸ்யமான சம்பவம் கென்யாவின் ரிசாவோ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஒவ்வொன்றும் வெறும் 10 கிராம்களே அளவுடைய குருவிகள் எனினும் அவை பல்லாயிரக்கணக்கில் கூடியிருந்து பறந்தமையால் அந்த காட்சியை கண்டும், பறக்கும் ஒலியையும் கேட்டும் அதிர்ச்சியடைந்த யானைகள் தமது நகர்விலிருந்து பின்வாங்கியுள்ளன.
இந்த கண்கொள்ளாக் காட்சியினை 60 வயதுடைய அன்ரெறோ ரொப் என்ற புகைப்படக்கலைஞர் தனது கமெராவுக்குள் சிறையெடுத்துள்ளார்.
வீடியோவை பார்க்க